பிரபல நடிகருக்கு ஜோடியாக மீண்டும் திரைக்குவரும் மீரா ஜாஸ்மின்!

Wednesday, 21 April 2021 - 15:48

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%21+
தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். 2003 ஆம் ஆண்டு மலையாலயத்தில் வெளியான 'பாடம் ஒன்னு ஒரு விலபம்' என்ற படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

மாதவனுக்கு ஜோடியாக ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன்பின்னர் ஆஞ்சநேயா, சண்டைக்கோழி, புதிய கீதை, பரட்டை என்கிற அழகுசுந்தரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

மலையாளத்திலும் தமிழிலும் பல படங்களில் நடித்து வந்த அவர் 2014ஆம் ஆண்டு பொறியியலாளர் ஒருவரை திருமணம் செய்ததன் பின்னர் நடிப்பிலிருந்து விலகி துபாய்க்கு சென்று வசித்துவந்தார்.

பின்னர், 2016ஆம் ஆண்டு அவருக்கு விவாகரத்து ஆனது. அதன்பின்னர் இந்தியா திரும்பிய அவர் நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நடித்த ‘பூமரம்’ படத்தில் சிறிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்தார்.

தற்போது, மீண்டும் 5 வருடங்கள் கழித்து தற்போது நடிகர் ஜெயராம் நடிக்கும் திரைப்படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனை அப்படத்தின் இயக்குநர் சத்தியன் அந்திக்காடு தனது  பேஸ்புக் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.