வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் ‘விடுதலை’: முதல் பார்வை வெளியானது! (படங்கள்)

Thursday, 22 April 2021 - 12:36

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%98%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E2%80%99%3A+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

வெற்றிமாறனின் இயக்கத்தில் இதுவரையில் வெளியான படங்களுக்கு ஜீ.வி. பிரகாஷ்குமார் இசையமைத்து வந்திருந்த நிலையில்  முதல்முறையாக வேறொரு இசையமைப்பாளருடன் விடுதலை படத்தின் மூலம் வெற்றிமாறன் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூரி முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தை ரசிகர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியும் இப்படத்தில் இணைந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து இந்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

இந்நிலையில், சூரி காவல்துறை உத்தியோகத்தர் வேடத்தில் இருக்கும் முதல் பார்வை போஸ்டர் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

No description available.
No description available.