மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப் பதிவு

Thursday, 22 April 2021 - 14:54

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் சட்டசபைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப் பதிவு தற்போது இடம்பெற்று வருகிறது.

இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

8 கட்டமாக நடைபெறும் மேற்கு வங்காள மாநிலத்தின் சட்டசபைத் தேர்தலில், இதுவரையில் 5 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

ஆறாம்கட்ட தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்றைய தேர்தலில் வாக்களிக்க 10,300,000 பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.