மீண்டும் தனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ்!

Friday, 23 April 2021 - 12:18

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%21
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் அண்மையில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படம் தொடர்பில் சில சர்ச்சைகள் எழுந்தபோதிலும் கர்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்த தனுஷின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டதுடன், அவருக்கு தேசிய விருது கிடைக்கும் எனவும் பலர் கூறிவருகின்றனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதையடுத்து, சிறந்த இயக்குநராக அவர் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், கர்ணன் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கும் பணிகளை மாரி செல்வராஜ் முன்னெடுத்துள்ளதாகவும் இப்படத்துக்கான தயாரிப்புப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின், படப்பிடிப்பு அடுத்த வாரமளவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டு இப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.