பிரபல இந்தி இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோட் காலமானார்

Saturday, 24 April 2021 - 14:35

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
இந்தி திரையுலகில் 1990 ஆம் ஆண்டுகளில் பிரபல இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் நதீம் சைபி மற்றும் ஷ்ரவன் ரத்தோட்.

இந்த இருவரும் சேர்ந்து இசையமைத்து, உருவான ஆசிக் படம் கடந்த 1990 ஆம் ஆண்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றது.

இதனை தொடர்ந்து, இருவரும் சேர்ந்து இசையமைத்த பல படங்கள் வெற்றி பெற்றன. சாஜன் (1991), ஹம் ஹெய்ன் ரஹி பியார் கே (1993), பர்தேஸ் (1997) உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவர்கள் ஒன்றாக பணியாற்றினார்கள். இதன்பின்னர் அவர்கள் கடைசியாக, தோஸ்தி பிரண்ட்ஸ் பார்எவர் என்ற படத்தில் ஒன்றாக பணியாற்றினர். 

இந்நிலையில், ஷ்ரவன் ரத்தோட் கொரோனா தொற்றுறுதி காரணமாக மும்பையில் உள்ள ரகேஜா வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

66 வயதுடைய அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.