வெற்றிமாறன் படத்தில் கெளதம் மேனன்

Saturday, 24 April 2021 - 22:28

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D
இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தில் இயக்குநர் கெளதம் மேனன் நடிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படத்தின் முதல் பார்வை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

அத்துடன் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இதற்கமைய, முதல்முறையாக இசைஞானியுடன் வெற்றிமாறன் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.