93ஆவது ஒஸ்கார் விருது: முழு விபரம்

Monday, 26 April 2021 - 10:11

93%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%3A++%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

சர்வதேச திரைப்படத் துறையில் அதி உயர் விருதாக ஒஸ்கார் விருது கருதப்படுகிறது.

93 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று(26) நடைபெற்றது.

வழமையாக பெப்ரவரி மாதம் நடத்தப்படும் இந்நிகழ்வு கொரோனா பரவல் காரணமாக,  இம்முறை 2 மாதங்கள் தாமதமாகவே நடத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

ஒஸ்கார் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் தொடர்பான முழுவிவரம் வருமாறு:

சிறந்த படம் -  நோ மேட்லேண்ட்

சிறந்த இயக்குநர் -  க்ளோயி சோவ் (நோ மேட்லேண்ட்)

சிறந்த நடிகர் -  என்டனி ஹொப்கின்ஸ் (தி பாதர்)

சிறந்த நடிகை -  பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோ மேட்லேண்ட்)

சிறந்த ஆவணப்படம் -  மை ஆக்டோபஸ் டீச்சர்

சிறந்த வெளிநாட்டு படம் -  அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் -  சோல்

சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

சிறந்த ஆவண குறும்படம் -  கோலெட்

சிறந்த லைவ் எக்சன் குறும்படம் -  ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - எண்ட்ரு ஜெக்சன், டேவிட் லீ, எண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்)

சிறந்த ஒளிப்பதிவாளர் -  எரிக் மெசர்ச்மிட் (மங்க்)

சிறந்த படத்தொகுப்பாளர் -  மைக்கெல் நெல்சன் (சவுண்ட் ஒஃப் மெட்டல்)

சிறந்த திரைக்கதை -  எமரல்ட் பென்னல் (பிராமிசிங் யங் வுமன்)

தழுவல் திரைக்கதை -  கிறிஸ்டோபர் புளோரியன் (தி பாதர்)

சிறந்த பாடல் -  பைட் ஃபோர் யூ

சிறந்த பின்னணி இசை - ட்ரெண்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜோன் படிஸ்டி (சோல்)

சிறந்த துணை நடிகர் - டேனியல் கல்லூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா)

சிறந்த துணை நடிகை -  யூ ஜங் யூன் (மினாரி)

சிறந்த ஆடை வடிவமைப்பு -  அன் ரோத் (பிளாக் பொட்டம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு -  டொனால்ட் கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்)

சிறந்த ஒலி அமைப்பு - நிகோலஸ் பெகர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஒஃப் மெட்டல்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பொட்டம்)