'தளபதி 65' பட நடிகைக்கு கொரோனா!

Monday, 26 April 2021 - 12:12

%27%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+65%27+%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%21
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் பூஜா ஹெக்டே தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

பின்பு இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு அண்மையில் ஜோர்ஜியாவில் நடந்தது. இதற்காக படக்குழுவினர் ஜோர்ஜியாவிற்கு சென்றிருந்தனர்.

அதன்போது விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் காதல் மற்றும் டூயட் பாடல் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டதுடன், ஜோர்ஜியாவில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் நேற்று (25) சென்னை திரும்பினர்.

இந்தநிலையில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அதன்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள ட்விட்டர்  பதிவில், ‘‘எனக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்றி வருகிறேன். என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவத்துள்ளார்.