தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இந்த வாரம் உயர் தன்மையில்

Monday, 26 April 2021 - 20:25

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும், தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இந்த வாரம் உயர் தன்மையில் உள்ளதாக தேயிலை தரகர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வருடத்தின் முதல் மூன்று மாத காலப்பகுதியினுள், 74,300,000 கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 53,800,000 கிலோ கிராம் உற்பத்தி செய்யப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புள்ளி விபரங்களுக்கு அமைய இந்த வருடத்தின் ஜனவரி முதல் மார்ச் மாத காலப்பகுதியில் கடந்த ஆண்டை விட 23,500,000 கிலோ கிராம் தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, அதிக அளவிலான இலங்கை தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளில் துருக்கி முதலிடத்தில் உள்ளது.

அதனை தொடர்ந்து ஈராக் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளன.

இந்த நிலையில், இலங்கை தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா நான்காவது இடத்தில் பதிவாகியுள்ளது.

அதேபோல ஐக்கிய அரபு இராச்சியம், அசர்பைஜான், லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளும் கணிசமான அளவு இலங்கை தேயிலையை இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.