நீர்ப்பாசன அணைக்கட்டு - காணிகளை பண்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 69.53 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவி

Tuesday, 27 April 2021 - 8:24

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+69.53+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF
நீர்ப்பாசன அணைக்கட்டு மற்றும் விவசாய காணிகளை பண்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 69.53 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் அடிப்படையில் வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கை ஒன்று நிதி அமைச்சின் செயலாளருக்கும் உலக வங்கியின் இலங்கை வதிவிட பிரதிநிதிக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த நிதி உதவியுடன், நீர்ப்பாசன அணைக்கட்டுக்களை மேம்படுத்துவதன் மூலம், ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் ஹெக்டயர் விஸ்தீரணமான காணிகளில் சிறந்த முறையில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அமுல்படுத்தப்படுவதன் மூலம் 356,000 விவசாய குடும்பங்கள் பயனடைவர் என மதிப்பிடப்பட்டுள்ளது.