காய்கறிகள் மற்றும் பழங்களை மேல் மாகாணத்திற்குக் கொண்டு செல்ல வேலைத்திட்டம்

Tuesday, 27 April 2021 - 15:13

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தனிமைப்படுத்தப்பட்டதை அடுத்து விவசாயிகளின் நேரடி பங்களிப்புடன் காய்கறிகள் மற்றும் பழங்கள் என்பனவற்றை மேல் மாகாணத்திற்குக் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

உயர் தொழிநுட்ப விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசிந்திர ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

நுவரெலியா, தம்புத்தேகம மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களுடன் தொடர்புப்படும் வகையில் விவசாயிகளை இணைத்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்த கலந்துரையாடல் ஒன்று பொருளாதார மத்திய நிலைய முகாமையளர்களுடன் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அதில் மேற்கொள்ளப்படும் முடிவுகளின் அடிப்படையில், பழங்கள் மற்றும் மரக்கறிகளை மேல் மாகாணத்திற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷசிந்திர ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.