நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா!

Wednesday, 28 April 2021 - 12:19

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%21
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

திரைப்பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவொன்றின் மூலம், தான் தொற்றுக்குள்ளானதை அறிவித்துள்ளார்.

“எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், வாய்ப்பு கிடைத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். என்னுடையை ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கவலைப்பட வேண்டாம், நான் நலமுடன் உள்ளேன்” என அப்பதிவில் தெரிவித்துள்ளார்.