மதம் தொடர்பான சர்ச்சைகளுக்கு யுவன் கொடுத்த பதிலடி!

Thursday, 29 April 2021 - 11:05

%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%21
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நேற்று, குர்ஆன் வசனம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இந்தப் பதிவின் ஊடாக யுவன் மதப்பிரசாரம் செய்வதாக ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.

அதில், “நான் உங்களை விரும்பியதும், பின்தொடர்வதும் நீங்கள் யுவன் சங்கர் ராஜாவாக பிறந்ததால் தான். மதத்தை பரப்பும் தளம் இது இல்லை.

இப்படியே தொடர்ந்தால் உங்கள் பக்கத்திலிருந்து வெளியேறிவிடுவேன்” என்று குறித்த ரசிகர் கமெண்ட் செய்திருந்தார்.

அதற்கு வெளியேறிவிடுங்கள் என்று யுவன்சங்கர் ராஜா பதில் கொடுத்திருந்தார். மேலும், நீங்கள் பதிவிட்டிருக்கும் கருத்தை பகவத்கீதையில் காணவில்லையா எனவும் மேலும் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த யுவன், “நான் நம்பும் ஒரு மதம் குறித்துப் பதிவிடுவது எந்தவகையில் பிறமதத்தை குறைத்து மதிப்பிடுவதாக அமையும், திரைப்பிரபலங்களும் தனிமனிதர்களே, அவர்களுக்கும் உரிமைகள் உள்ளன, என் நம்பிக்கை என் உரிமை” என பதிவிட்டிருந்தார்.

மற்றொரு நபர், “புதிய மதத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நீங்கள் இன்னும் ஏன் பழைய பெயரையே பயன்படுத்துகிறீர்கள். உங்கள் பெயரை மாற்றுங்கள்” என்று கமெண்ட் செய்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யுவன் சங்கர் ராஜா, “நான் உங்களுக்கு சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு இந்தியன். நான் ஒரு தமிழன். நான் ஒரு இஸ்லாமியன்.

இஸ்லாமியர்கள் அரேபிய நாடுகளில் மட்டும் தான் இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை. மதமும் இனமும் வெவ்வேறானவை. தேசியமும் மதமும் வெவ்வேறானவை. இந்த அடிப்படை விடயம் கூட உங்களுக்கு புரியவில்லை என்றால் எதுவும் புரியாது.

வெறுப்பு பிரசாரத்தை நிறுத்துங்கள். அமைதி நிலவட்டும்” என்று தெரிவித்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இந்தப் பதிவும், கமெண்ட்டுகளும், தற்போது ஸ்கிரீன்ஷாட் வடிவில் சமூகவலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டுவருகின்றன.