ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு

Thursday, 29 April 2021 - 13:21

%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
6 மாதங்களுக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் நாட்டின் ஏற்றுமதி வருவாய் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருவாய் 62.47 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

2021ஆம் முதல் காலாண்டில் வர்த்தக ஏற்றுமதியின் வருவாய் 11.51 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

நாட்டில் கொவிட்-19 தொற்றின் பரவலால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட்டமை இதற்கு காரணமாகும் என ஏற்றுமதி அபிவிருத்தி சபை சுட்டிக்காட்டியுள்ளது.