தென்னிந்திய திரைப்பட இயக்குநர் கே.வி. ஆனந்த் காலமானார்

Friday, 30 April 2021 - 8:13

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BF.+%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
தென்னிந்திய திரைப்பட இயக்குருநம் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார்.

காலமாகும் போது அவருக்கு 54 வயது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கே.வி. ஆனந்த் 1994ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான தென்மவின் கோம்பத்துடன் எனும் திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர், 2005 ஆம் ஆண்டு கனா காண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அநேகன், கவண் மற்றும் காப்பான் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அத்துடன், இதுதவிர, காதல் தேசம், முதல்வன், போய்ஸ், செல்லமே, சிவாஜி போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்.