இஸ்ரேலின் மதநிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 44 பேர் பலி

Friday, 30 April 2021 - 14:25

%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+44+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற மதநிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 44 பேர் பலியாகினர்.

அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மரணித்தவர்களின் முழுமையான எண்ணிக்கையை அந்த நாட்டு தேசிய அவசர சேவை பிரிவு வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் 44 பேர் மரணித்ததாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த சம்பவத்தை கடுமையான பேரழிவு என குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) மரணித்தவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.