இந்தியாவில் ஒரே நாளில் 4 இலட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவு!

Saturday, 01 May 2021 - 6:30

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%21
சர்வதேச ரீதியில் நாளொன்றில் 4 இலட்சம் கொவிட்-19 தொற்றுறுதியானோர் அடையாளம் காணப்பட்ட முதலாவது நாடாக இந்திய பதிவாகியுள்ளது.

நேற்றிரவு 11 மணி வரையில், 408,323 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,163,488 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், இந்தியாவில் நேற்றைய நாளில் 3,464 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதையடுத்து, கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 211,778 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.