இந்தியாவில் கொவிட் பரவலுக்கு மத்தியில் இடம்பெற்ற மகா கும்பமேளா நிகழ்வு

Saturday, 01 May 2021 - 13:40

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
இந்தியாவில், கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் இடம்பெற்ற மகா கும்பமேளா நிகழ்வில், 70 இலட்சம் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

இது கொவிட்-19 பரவல் தீவிரத்தின் அச்சத்தை, மேலும் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் மகா கும்பமேளா நிகழ்வு, வழமையாக ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் இறுதி வரை இடம்பெறும்.

எனினும், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, மகா கும்பமேளா நிகழ்வை ஒரு மாதமாக குறைப்பதற்கு உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமான மகா கும்பமேளா நிகழ்வு, புனித நீராடலுடன் நேற்று நிறைவடைந்தது.

கும்பமேளா நிகழ்வின்போது, சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனைகளில், 2, 600 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் நாளொன்றில் 4 இலட்சம் கொவிட்-19 தொற்றுறுதியானோர் அடையாளம் காணப்பட்ட முதலாவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 4 இலட்சத்து 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதேநேரம், இந்தியாவில் நேற்றைய நாளில், 3,464 மரணங்களும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.