தாய் இறந்தது கூட தெரியாமல் சடலத்துக்கு அருகில் அமர்ந்து பால் கேட்டு அழுந்த குழந்தை!

Saturday, 01 May 2021 - 14:53

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%21
தாய் இறந்தது கூட தெரியாமல் சடலத்துக்கு அருகில் அமர்ந்து பால் கேட்டு அழுந்துகொண்டிருந்த குழந்தையொன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள கிராமம் ஒன்றில் தாய் ஒருவர் தனது 18 மாத குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

மேற்படி தாய் உடல் நலக்குறைவால் அண்மையில் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்து இரண்டு நாட்களின் பின்னர் துர்நாற்றம் வீசியதாகவும், இதனையடுத்து பிரதேசவாசிகள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்த தாயுடன் இருந்த பச்சிளம் குழந்தையை மீட்டுள்ளனர்.

இக்குழந்தை தனது தாய் உயிரிழந்ததால் இரண்டு நாட்களாக பால் இன்றி பசியில் வாடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக பிரதேசவாசிகள் எவரும் குழந்தையை மீட்க முன்வரவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குழந்தையை மீட்ட காவல்துறையினர் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததுடன் குழந்தைக்கு பால் மற்றும் உணவு என்பவற்றை கொடுத்துள்ளனர்.