இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கை

Saturday, 01 May 2021 - 19:39

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
2020ம் ஆண்டில் இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தில் தேயிலைத்துறையின் பங்களிப்பு ஒருலட்சத்து 8 ஆயிரத்து 544 மில்லியன் ரூபாவாக காணப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின், நடைமுறை சந்தை விலைகளின்படியான, கைத்தொழில் மூலங்கள் ஊடாக மொத்த தேசிய வருமானத்துக்கு கிடைக்கப்பெற்ற பங்களிப்புகள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி 2019ம் ஆண்டைக்காட்டிலும் 2020ம் ஆண்டு 9 ஆயிரத்து 203 மில்லியன் ரூபாய் அதிகபடியான தொகை மொத்த தேசிய வருமானத்துக்கு தேயிலைத்துறை வழங்கியுள்ளது.