இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று!

Sunday, 02 May 2021 - 7:21

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%21+
இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் இன்று (02) இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், 2 விக்கட்டுக்களை இழந்து 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்னதாக இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸில், 7 விக்கட்டுக்களை இழந்து 493 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 251 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி, 259 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ள நிலையில், இன்று தமது இரண்டாம் இன்னிங்ஸை தொடரவுள்ளது.