தமிழக சட்ட மன்ற தேர்தல்: தொடர்ந்தும் திமுக முன்னிலையில்

Sunday, 02 May 2021 - 10:11

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
தமிழக சட்டமன்றத் தேர்தலில், வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

ஆட்சியைக் கைப்பற்ற, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், 118 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

இதுவரையில் வெளியாகியுள்ள முடிவுகளின்படி, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி முன்னிலையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி, 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 86 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

அதேநேரம், மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.