தமிழக தேர்தல்: தற்போதைய நிலைவரம்

Sunday, 02 May 2021 - 13:18

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
தமிழக சட்டமன்றத் தேர்தலில், இதுவரையில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின்படி, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் நிலை உறுதியாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை.

கடந்த மாதம் 6ஆம் திகதி நடைபெற்ற, தமிழக சட்டமன்ற தேர்தலின், வாக்கு எண்ணும் பணிகள் இன்று இடம்பெறுகின்றன.

ஆட்சியைக் கைப்பற்ற, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், 118 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

இதுவரையில் வெளியாகியுள்ள முடிவுகளின்படி, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி, 137 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 96 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.