கடந்த ஆண்டு மீன்பிடித் துறை வீழ்ச்சி

Sunday, 02 May 2021 - 15:20

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
2020 இல் மீன்பிடித் துறை பின்னடைவை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த மீன் உற்பத்தி 2020 இல் 15.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு, மொத்த மீன் உற்பத்தியில் 76 சதவீதத்திற்கு வகைகூறும் கடல் மீன் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும்.

அடிக்கடி ஏற்பட்ட வானிலை மாற்றங்கள், நோய்த்தொற்றுக் காலப்பகுதியில், மீன்பிடியின் மீதும் ஏனைய வழங்கல் சங்கிலி நடவடிக்கைகளின் மீதும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இதற்கு காரணமாகியுள்ளன.

விசேடமாக கொவிட்-19 கொத்தணிக்குள் மீன் வழங்கல் சங்கிலித் தோற்றம் காரணமாக, ஆழ்கடல் மற்றும் கரையோர மீன்பிடி நடவடிக்கைகளில் கணிசமானளவு சுருக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.