தமிழக சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி என தகவல்!

Sunday, 02 May 2021 - 21:01

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%21
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத போதிலும், பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலைப்பெற்றுள்ள திராவிட முன்னேற்றக்கழகத்தின் கூட்டணி ஆட்சியமைக்கும் நிலை உருவாகி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கூட்டணி 140க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் கூட்டணி 90க்கும் குறைவான இடங்களில் முன்னிலைப்பெற்றுள்ளது.


டிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் அதன் கூட்டணியும் ஒரேயொரு இடத்தில் முன்னிலைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் அதன் கூட்டணியும் எந்தவொரு இடத்திலும் முன்னிலைப்பெறவில்லை.

இதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டிருப்பதாக அதன் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இதுவரையில் வெளியாகியுள்ள வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு அமைய தமது கட்சியின் வெற்றி உறுதியாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் தேர்தலில் முன்னிலைப்பெற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோகணேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் தங்களது வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை, இந்தியாவின் மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் திரினமூல் காங்கிரஸ் 219 தொகுதிகளில் முன்னிலைப்பெற்றுள்ள அதேநேரம், பாரதிய ஜனதா கட்சி 72 தொகுதிகளையே கைப்பற்றும் நிலையில் உள்ளது.

பாரதியே ஜனதா கட்சி கடந்த தேர்தலில் பெற்றிருந்த ஆசனங்களில் 50 ஆசனங்கள் அளவில் இந்தமுறை அங்கு இழந்துள்ளது.

அத்துடன் கேரளா மாநிலத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணி முன்னிலையில் உள்ளது.

அந்த கட்சி 97 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதோடு அவர்களை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது.

அந்த மாநிலத்தில் பாரிய ஜனதா கட்சி 78 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காங்கிரஸ் கட்சி 46 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

அத்துடன் 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் அனைத்திந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதோடு காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.