பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வெற்றி

Monday, 03 May 2021 - 8:43

%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 7 விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.

அஹமதாபாத்தில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

167 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 17.4 ஓவர்கள் நிறைவில் இலக்கை அடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் மயங் அகர்வால் தெரிவுசெய்யப்பட்டார்.