கே.எல். ராகுலுக்கு சத்திர சிகிச்சை!

Monday, 03 May 2021 - 10:22

%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%21+
பஞ்சாப் கிங்ஸ் அணித்தலைவர் லோகேஷ் ராகுல் சத்திர சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் கடுமையான வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டதையடுத்து, வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது, அவர் குடல்வால் அழற்சியால் (appendicitis) பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், குடல்வால்,  சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே அவர் இப்போதைக்கு ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளதாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் அணியை வழிநடத்தினார்.

லோகேஷ் ராகுல் 7  போட்டிகளில் விளையாடி 4 அரைசதம் உட்பட 331 ஓட்டங்களை குவித்துள்ளார். அவர் இல்லாதது பஞ்சாப் அணிக்கு ஒரு பின்னடைவு என ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.