பங்களாதேஷில் படகொன்று விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலி

Monday, 03 May 2021 - 11:56

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+26+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
பங்களாதேஷின் பத்மா நதியில் படகொன்று விபத்துக்குள்ளானதில் 26 பேர் மரணித்தனர்.

அத்துடன் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த படகு பாரியளவு மணல் ஏற்றிச் சென்ற மற்றுமொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.