சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திசர பெரேரா ஓய்வு!

Monday, 03 May 2021 - 12:47

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%21
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமது தீர்மானத்தை சிறிலங்கா கிரிக்கெட்டுக்கு அவர் அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

32 வயதான அவர் 6 டெஸ்ட், 166 ஒரு நாள் மற்றும் 84 ,இருபது 20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி இருப்பதுடன், 37 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்கால தொடர்களில், திசர பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்கள் பலர் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என தகவல் வெளியாகி இருந்த பின்னணியில் அவர் தமது ஓய்வை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது