சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மூவருக்கு கொரோனா!

Monday, 03 May 2021 - 16:05

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%21
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 3 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அணியின் தலைமை நிறைவேற்று அதிகாரி கே. விஷ்வநாதன், பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் எல்.பாலாஜி மற்றும் பேருந்து சுத்திகரிப்பாளர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

தொற்றுறுதியான மூவருக்கும் இன்று மீண்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மீண்டும் அவர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டால் அவர்கள் 10 நாட்கள் அணிக்கு வெளியில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

எனினும் அணியின் கிரிக்கட் வீரர்கள் எவருக்கும் தொற்றுறுதியாகவில்லை என நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில்  உறுதிபடுத்தப்பட்டது.