தமிழக சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி!

Monday, 03 May 2021 - 20:35

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21
தமிழக சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிப்பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து 125 ஆசனங்களையும், உதய சூரியன் சின்னத்தில் 8 ஆசனங்களையும் பெற்று மொத்தமாக 133 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் கட்சி 18 ஆசனங்கள் உட்பட திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 159 ஆசவனங்களை வென்றுள்ளது.

இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சட்டமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் கூட்டம் நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள், மு.க.ஸ்டாலினை, முதலமைச்சராக ஒருமனதாக தெரிவுசெய்யவுள்ளனர்.

இதையடுத்து, மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகை சென்று, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடித்தை கையளிப்பார்.

இந்த நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி, மு.க.ஸ்டாலின் முதமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், தனிப் பெரும்பான்மையாக வெற்றிபெற்று, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைக்க உள்ளது.

சட்டசபைத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 75 ஆசனங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்துள்ளது.இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமது பதவி விலகல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.