இந்தியாவில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 2 கோடியை கடந்தது!

Monday, 03 May 2021 - 21:30

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+2+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%21
இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது.

நேற்றைய நாளில், 3 இலட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதையடுத்து, இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 22,075,000 ஐக் கடந்துள்ளது.

இதேநேரம், நேற்றைய நாளில் இந்தியாவில், 3,400 இற்கும் அதிகமான கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை, 222,383 ஆக அதிகரித்துள்ளது.

16,600,000 அதிகமானோர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

3,452,457 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொவிட்-19 பரவல் தீவிரமடைவதன் காரணமாக, எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 20 வரை புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில், கடந்த பெப்ரவரி மாத இறுதியில் நாளொன்றுக்கு 450 என்ற அளவில் தொற்றாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

நேற்றைய நாளின் நிலவரப்படி, 1,228,064 பேருக்குத் தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில், 1,090,338 பேர் குணமடைந்துள்ள நிலையில், 14,468 பேர் மரணித்தனர்.

123,258 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதனிடையே, கடந்த முதலாம் திகதி முதல் மறு அறிவித்தல்வரை தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பல்வேறு புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது.

அரச மற்றும் தனியார்த்துறை அலுவலகங்கள், பொதுப்போக்குவரத்து, வர்த்தக நிலையங்கள் என்பனவற்றுக்கு இந்தப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.