பில் கேட்ஸ் தம்பதி விவாகரத்து!

Tuesday, 04 May 2021 - 9:21

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21

மைக்ரோசொஃப்ட் நிறுவுனரும், உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் விவாகரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக ட்விட்டரில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

27 வருட திருமண வாழ்க்கையை பூர்த்திசெய்துள்ள கேட்ஸ் தம்பதியினர் தொடர்ந்தும் தமது உறவினை முன்கொண்டுசெல்ல முடியாது என அறிவித்துள்ளமை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

1975ஆம் ஆண்டு போல் அலன் உடன் இணைந்து மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தை ஆரம்பித்த காலத்தில் அதன் தலைமை நிறைவேற்று அதிகாரியாக பில் கேட்ஸ் செயற்பட்டார். 

பின்னர் அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளையும் வகித்தார்.

அந்நிறுவனத்தில் முகாமையாளராக பணிபுரிந்த மெலிண்டாவை சந்தித்த பில் கேட்ஸ் பின்னர் ஹவாயில் வைத்து 1994 ஆம் ஆண்டு அவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெனிபர் கெதரின், போஃப் அடேல் என்ற இரு மகள்களும் ரோடி ஜோன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

கேட்ஸ் தம்பதியினர் இணைந்து 2000 ஆம் ஆண்டு உருவாக்கிய பில் மற்றும் மெலிண்டா நிதியமானது உலகளாவிய ரீதியில் பல நலன்புரி செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்பை வழங்கியுள்ள அதேவேளை, கொவிட் 19 பரிசோதனையை குறைந்த செலவில் மேற்கொள்வதற்கு இந்த இலாபநோக்கற்ற நிறுவனம் நிதியுதவிகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.