மெக்ஸிகோவில் தொடருந்து மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் 15 பேர் பலி - 70 பேர் காயம் (காணொளி- படங்கள்)

Tuesday, 04 May 2021 - 11:23

%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+15+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+-+70+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
மெக்ஸிகோ நாட்டின் மெக்ஸிகோ நகரில் நேற்று (03) இரவு தொடருந்து மேம்பாலம் ஒன்று மெட்ரோ தொடருந்துடன் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த இடிபாடுகளின் கீழ் பல வாகனங்கள் சிக்கியுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற மெக்ஸிகோ நகர முதல்வர் க்ளாவுடியா ஷெய்ன்பாம் தனது ட்விட்டர் பக்கத்தில் "தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்தும் பணிபுரிகின்றனர். அத்துடன் பல்வேறு வைத்தியசாலைகள் பங்கேற்கின்றன.இது தொடர்பில் விரைவில் மேலதிக தகவல்களைத் தருவோம்" என பதிவிட்டுள்ளார்.

No description available.


No description available.