சென்னை சுப்பர் கிங்ஸ் அணிவீரர்கள் தனிமைப்படுத்தலில்: போட்டியும் பிற்போடப்பட்டது!

Tuesday, 04 May 2021 - 11:44

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%21

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் அணியின் ஏனைய உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நாளை இடம்பெறவிருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் லக்ஷ்மிபதி பாலாஜி உள்ளிட்ட மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்றுமுன்தினம் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அணியின் வீரர்களுடன் பயிற்றுவிப்பாளர் பாலாஜி நேரடியான தொடர்புகளை கொண்டிருந்தமையினால் அணித்தலைவர் தோனி உள்ளிட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் அணி உறுப்பினர்களும் ஒரு வாரத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இவர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவ குழாமினால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வொரியர் ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான நேற்றைய போட்டி பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.