ரிதிமன் சஹா – அமித் மிஸ்ராவுக்கும் கொவிட் தொற்று!

Tuesday, 04 May 2021 - 13:08

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%BE+%E2%80%93+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%21
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் காப்பாளர் ரிதிமன் சஹா மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வீரர் அமித் மிஸ்ரா ஆகியோரும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் விதிமுறைகளுக்கமைய, இருவருக்கும் இரண்டாம் கட்ட கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அதில் பெறப்படும் முடிவுக்கமைய அடுத்தக்கட்ட தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒத்திவைக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.