கடற்கலன்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

Tuesday, 04 May 2021 - 13:54

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
கடலோரப் பகுதியில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சியுடன், கப்பல்கள் மூலம் பயணிகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்து அதிகரித்துள்ளமையால், கடலோரப் பகுதிகளில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்களுக்கான ஒழுங்குபடுத்தல்களின் தேவை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, நகலாக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கான சட்டவரைஞரின் உடன்பாட்டைப் பெற்றுக் கொள்வதற்கும், பின்னர் அரச வர்த்தமானியில் வெளியிட்டு, அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிதற்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.