சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் 12 பேர் பலி!

Tuesday, 04 May 2021 - 19:28

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+12+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் 12 பேர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாநில ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவி;க்கின்றன.

அந்த மாநிலத்தில் 292 தொகுதிகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 212 தொகுதிகளில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.

அவர்களை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 77 தொகுதிகளில் மாத்திரம் வென்றுள்ளது.

தேர்தல் முடிவுகளை அடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் 12 பேர் மரணித்ததோடு பல வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்களே இவ்வாறு மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைகளை கண்டித்து நாடு முழுவதும் கொவிட்-19 வழிகாட்டல்களை பின்பற்றி, போராட்டம் முன்னெடுக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.