நாட்டின் சில மாவட்டங்களில் கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்!

Tuesday, 04 May 2021 - 21:51

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%21
நாட்டின் சில மாவட்டங்களில் கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பதுளை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிமாக கடுமையான காற்றும் வீசும்.

மின்னல் தாக்கம் காரணமாக மக்கள் திறந்தவெளிகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளுமாறும், இடிமின்னல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை கையாளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.