கைக்குண்டுடன் 'அலிவத்தே அசித' கைது!

Wednesday, 05 May 2021 - 7:17

%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%27%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%27+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
கிராண்ட்பாஸ், முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி பகுதிகளில் இடம்பெற்ற குற்ற செயல்கள் மற்றும் மனித கொலையொன்றுடன் தொடர்புடைய  'அலிவத்தே அசித' என்பவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி காவல்துறையினரால் அவர் நேற்று (04) கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை பகுதியிலுள்ள வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.