உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை

Wednesday, 05 May 2021 - 17:01

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இலங்கை மக்கள் தற்போதைய கொவிட் 19 பரவல் நிலைமையை தீவிரநிலைமையாக கருதி செயற்பட வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொறுப்பதிகாரி வைத்தியர் ஒலிவியா நீவெராஸ், காணொளி செய்தி ஒன்றின் மூலம் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.

மூன்றாவது அலை மிக மோசமான பாதிப்புகளைத் தரக்கூடியது.

எனவே இலங்கை வாழ் மக்கள் இந்த விடயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் மாத்திரம் தனித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. இதற்கு பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.