ஒரு வாரத்துக்கு நாடு முடக்கப்படுமா?

Thursday, 06 May 2021 - 14:24

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
நாளாந்தம் கொவிட்-19 தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையினால், ஒரு வாரத்திற்காவது நாட்டை முடக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

அத்துடன், அரச மற்றும் தனியார் துறைகளில், மாநாடுகள், சேவையாளர்களின் சந்திப்பு என்பன இடம்பெறுவது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.