மணமகனுக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!

Thursday, 06 May 2021 - 17:41

%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருந்த திருமணமொன்றில் மணமகனுக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

ஒரே பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மணமகனிடம் இரண்டாம் வாய்ப்பாட்டை கேட்டுள்ளார்.

அதன்போது மணப்பெண்ணின் கேள்விக்கு விடை அளிக்க மணமகன் தடுமாறியதால் அதனைகண்டு ஏமாற்றமடைந்த மணப்பெண், சாதாரண கணக்கு கூட தெரியாத ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ளமுடியாது என திருமணத்தை நிறுத்தும்படி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

மணப்பெண்ணின் பெற்றோர் அவரை சமாதானம் செய்ய முயன்றும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் மத்தியில் இருவீட்டாரும் வழங்கிய சீதனப் பொருட்களை சரிபார்த்து பிரித்து கொண்டு திருமணத்தை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.