இரகசிய காணொளி விவகாரத்தால் போர்க்களமான மஹரகம நகரசபை (காணொளி)

Thursday, 06 May 2021 - 19:11

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
மஹரகம நகர சபையில் இன்று இடம்பெற்ற மாதாந்த அமர்வின்போது கைகலப்பொன்று ஏற்பட்டுள்ளது.

மஹரகம நகர சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்களான சாவித்ரி குணசேகர மற்றும் நிஷாந்த விமலசந்திர ஆகியோரிடையே இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளது.

நகரசபையின் உறுப்பினர்களுக்கான அறையொன்றில் இடம்பெற்ற வாக்குவாதத்தை, ஆளும் தரப்பின் உறுப்பினரான சாவித்ரி குணசேகர அண்மையில் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

அவர் குறித்த காணொளியை சமூகவலைத்தளம் ஒன்றில் பதிவேற்றியிருந்தார். இது தொடர்பில் இன்றைய மாதாந்த அமர்வின்போது, சக உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

இதன்போது, ஆளும் தரப்பு உறுப்பினரான நிஷாந்த விமலசந்திர, இக்காணொளியை பதிவேற்றிய உறுப்பினாின் அருகில்சென்று எதிர்ப்பு தெரிவித்தபோது, அது கைகலப்பாக மாறியது.