சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்!

Friday, 07 May 2021 - 6:38

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவ தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட எல்தெனிய கிழக்கு, சூரியபாலவ தெற்கு மற்றும் வடக்கு, கீழ் கரகஹாமுல்ல வடக்கு, மேல் கரஹாமுல்ல வடக்கு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட கல்பொத்த, கெஸ்பெவ கிழக்கு, மாகந்தன மேற்கு, குந்தன, பொல்ஹேன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட திம்புர கிராம சேவகர் பிரிவும், மத்துகம காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட யடியன மேற்கு கிராம சேவகர் பிரிவும் இன்று காலை 6 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.