மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் சிகிச்சை

Friday, 07 May 2021 - 10:20

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88

குண்டு தாக்குதலுக்கு இலக்கான மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகருமான மொஹமட் நஷீட் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

53 வயதான அவர் அந்நாட்டு தலைநகர் பகுதியில் தமது மகிழுந்தில் பயணிக்கவிருந்த நிலையில், நேற்று (06.05.2021) இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு எந்த தரப்பினரும் இதுவரையில் உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் மாலைத்தீவிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு நாடாளுமன்றில் விசேட கூட்டமொன்றும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் வெளிநாட்டு பிரஜை ஒருவரும் காயமடைந்துள்ளதாக மாலைத்தீவு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.