நாட்டின் பல பாகங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகளவான மழை வீழ்ச்சிக்கு சாத்தியம்!

Friday, 07 May 2021 - 13:00

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+100+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும் தென் மாகாணங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று அதிகரித்து வீசக்கூடும்.

எனவே பொதுமக்கள் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.