கொவிட்-19 நிவாரணப் பணிகளுக்காக மனைவியுடன் இணைந்து நிதி திரட்டும் விராட் கோலி

Friday, 07 May 2021 - 12:56

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19++%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF

2021 ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி மற்றும் பெங்களூர் ரோயல் செலேஞ்சர்ஸ் அணியின் தலைவரான விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து கொவிட் 19 நிவாரண பணிகளுக்காக நிதி திரட்டும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். 

இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாவது  அலை ஆரம்பமானதையடுத்து  மக்களின் இயல்புநிலை தொடர்ந்தும் பின்னடைந்து வருகின்றது.

இதனை கருத்திற்கொண்டு பெட்கம்மின்ஸ் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கொரோனா நிவாரண பணிகளுக்காக நிதி திரட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணித்தலைவர் விராட் கோலியும் தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளார். இதற்கு ஆதரவளிக்க விரும்புவோர்  தங்களோடு இணைந்துக் கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.