கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பில் பதிவு!

Friday, 07 May 2021 - 13:50

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+24+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%21
கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொவிட் 19 ஐ தடுக்கும் தேசிய செயல்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 326 கொவிட் 19 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பகுதியில் 51 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம், கம்பஹா மாவட்டத்தில் 273 பேருக்கும், களுத்துறையில் 309 பேருக்கும், குருநாகல் மாவட்டத்தில் 48 பேருக்கும், காலி மாவட்டத்தில் 131 பேருக்கும் மாத்தறையில் 70 பேருக்கும், கேகாலையில் 19 பேருக்கும், பதுளையில் 40 பேருக்கும், அம்பாறையில் 58 பேருக்கும் தொற்றுறுதியானது.

இதுதவிர, கண்டியில் 153 பேருக்கும், நுவரெலியாவில் 43 பேருக்கும், அநுராதபுரத்தில் 58 பேருக்கும், இரத்தினபுரியில் 68 பேருக்கும், மாத்தளையில் 90 பேருக்கும், புத்தளத்தில் 60 பேருக்கும் நேற்று இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானது.