அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி தேவையை WHO பூர்த்தி செய்யும் - ஜனாதிபதி நம்பிக்கை

Friday, 07 May 2021 - 14:35

%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+WHO+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இலங்கையில் இரண்டாம் செலுத்துகைக்கு பற்றாக்குறையாகவுள்ள 6 இலட்சம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகத்துடனான இணையவழி காணொளி கலந்துரையாடலொன்றை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் 2 கோடி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்கான தேவை நிலவுவதாகவும் அப்பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட முதலாவது கொவிட்-19 அலையை கட்டுப்படுத்தியது போன்று தற்போதைய இரண்டாவது அலையையும் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு இயலுமை உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.